மயிலத்தில் தொழிற்பேட்டை: சிபிஎம் மாநாட்டில் தீர்மானம்

விழுப்புரம் மாவட்டம், மயிலத்தில் அரசு தொழிற்பேட்டை தொடங்க வேண்டும் என சிபிஎம் மாநாட்டில் தீர்மானம் நிறைவற்றப்பட்டது;

Update: 2021-11-29 15:33 GMT

மயிலத்தில் நடைபெற்ற சிபிஎம் ஒன்றிய மாநாடு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலம் ஒன்றிய 23-வது மாநாடு கூட்டேரிபட்டில் நடைபெற்றது, மாநாட்டிற்கு ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஆர்.ஏழூமலை, எம்.தமிழரசன், எஸ்.காளிதாஸ்ஆகியோர் தலைமை தாங்கினர்.

ஒன்றிய குழு உறுப்பினர் கே.கோவிந்தசாமி மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார், ஒன்றிய குழு உறுப்பினர் எஸ்.நாகப்பன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார், முன்னதாக ஆர்.கோவிந்தராஜ் அனைவரையும் வரவேற்று பேசினார்,

மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ராஜேந்திரன் மாநாட்டை தொடங்கி வைத்து தொடக்க உரையாற்றினர், ஒன்றிய செயலாளர் எம்.கலைச்செல்வன் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.குமார், சே.அறிவழகன் ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர்.

மாநாட்டில், மயிலம் அரசு மருத்துவமனையை தாலுக்கா தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும், மயிலம் தொகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும், மயிலம் ஒன்றியத்தில் தொழிற்பேட்டை அமைத்து இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும், கூட்டேரிப்பட்டில் தீயணைப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

தொடர்ந்து மயிலம் ஒன்றிய செயலாளராக எம்.கலைச்செல்வன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

Tags:    

Similar News