தொலைபேசி அழைப்பு: பழங்குடி இருளர் பகுதிக்கு விரைந்த கலெக்டர்
மழையால் பாதிக்கப்பட்ட தங்கள் பகுதியை பார்வையிட பழங்குடி இருளர் இன மக்கள் தொலைபேசியில் அழைத்ததால் விரைந்து பார்வையிட்ட கலெக்டர்
விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக மயிலம் ஊராட்சி ஒன்றியம், மயிலாடும்பாறை கிராமத்தில் உள்ள பழங்குடியினர் வசிக்கும் பகுதி பாதிப்புக்குள்ளானது. அங்கு வசிக்கும் பழங்குடி இன பெண் ஒருவர் தொலைபேசி வாயிலாக மாவட்ட கலெக்டர் மோகனை,தொடர்பு கொண்டு மழையில் பாதிக்கப்பட்ட தங்கள் பகுதியை பார்க்க நேரில் வரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதனைதையடுத்து, கடும் தொடர் மழையையும் பொருட்படுத்தாமல், உடனடியாக சம்மந்தப்பட்ட பகுதிக்கு இன்று (08.11.2021) நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் ந.ஸ்ரீநாதா, திண்டிவனம் உதவி ஆட்சியர் எம்.பி.அமித், வட்டாட்சியர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனா்.