கூட்டேரிபட்டில் சென்டர் மீடியட்டரில் எரியாத விளக்கு

விழுப்புரம் மாவட்டம், கூட்டேரிபட்டு நெடுஞ்சாலையில் உள்ள சென்டர் மீடியன் விளக்குகள் எரியாததால் பொதுமக்கள் அவதி

Update: 2021-08-30 15:30 GMT

கூட்டேரிப்பட்டு நெடுஞ்சாலையில் மின்விளக்குகள் எரியவில்லை

விழுப்புரம் மாவட்டம்,  கூட்டேரிப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் நான்கு முனை சந்திப்பில் உள்ள சென்டர் மீடியனில்  சுமார் 5க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை கடந்த 15 தினங்களாக எரியவில்லை.

அதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நெடுஞ்சாலையை கடக்கும் போது விபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தோடு சாலையை கடந்து வருகின்றனர். பழுதான மின்விளக்குகளை மாற்ற  உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது .

Tags:    

Similar News