மயிலத்தில் நிவாரண நிதி வழங்க விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை மனு
மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் நிவாரண நிதி வழங்க கோரிக்கை மனுவை கொடுத்தனர்;
மயிலத்தில் நிவாரண நிதி வழங்க விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை மனு
விழுப்புரம் மாவட்டம்,மயிலம் ஒன்றியஅகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் தடுப்பூசியை தேசம் முழுவதும் அனைத்து மக்களுக்கும் செலுத்திடவும், விவசாய குடும்பங்களுக்கு ஊரடங்கு கால நிவாரண நிதியாக ரூபாய் 7500 வழங்கக்கோரியும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலையில்லா கால நிவாரணம் வழங்கக்கோரியும் மயிலம் ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்தில் ஒன்றிய செயலாளர் எஸ்.அபிமன்னன் தலைமையில் மனு கொடுத்தனர்.அப்போது எஸ் .காளிதாஸ், எம் .குமார், ஸ்ரீதர், ஆர். முருகன் உடனிருந்தனர்.