100 நாள் வேலையை 200 நாளாக அதிகரிக்க கோரிக்கை

100 நாள் வேலையை 200 நாளாக அதிகரிக்கக் கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.;

Update: 2021-04-30 11:45 GMT

100 நாள் வேலையை,200 நாளாக உயர்த்துதல்,100 நாள் வேலை செய்த விவசாய தொழிலாளர்களுக்கு. முழு சம்பளத்தை வழங்கல், அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.7 ஆயிரத்து 500 கொரோனா கால நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில்  கோரிக்கை மனு கொடுத்தனர். 

மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,  மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

Tags:    

Similar News