குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய் சிறையிலடைப்பு

குழந்தையை கொடூரமான முறையில் தாக்கி காயப்படுத்திய தாயை, ஆந்திர மாநிலத்தில் தமிழக போலீீசார் கைது செய்து, இன்று அடைத்தனர்

Update: 2021-08-30 12:53 GMT

செஞ்சி அருகே குழந்தையை தாக்கி அதனை வீடியோவாக வெளியிட்ட துளசி சிறையிலடைப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே பெண் ஒருவா் 2 வயது குழந்தையை கொடூரமான முறையில் தாக்கி காயப்படுத்துவது போன்ற விடியோ கடந்த 23 ந்தேதி இணைய வழியில் வெளியாகி, அதிவேகமாகப் பரவியது. இதுதொடா்பாக சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

விசாாரணையில் செஞ்சி அருகே மணலபாடியை அருகே உள்ள மேட்டூரைச் சோ்ந்தவா் வடிவழகன்(37),விவசாயி. இவருக்கும் ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், ராம்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த துளசி (23) என்பவருக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றதாக தெரிகிறது, இவர்களுக்கு கோகுல் (4), பிரதீப் (2) ஆகிய இரு மகன்கள் உள்ளனர்,கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது. துளசி தனது 2 வயது மகன் பிரதீபை கொடூரமான முறையில் தாக்கி அதை விடியோவாக பதிவு செய்து,அதனை இணையத்தில் வெளியிட்டு உள்ளார், அது இணைைையத்தில் வேகமாக வைரலாகி விட்டது, அதனால் அந்த பெண்ணுக்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது,

குழந்தையை தாக்கியது தொடா்பாக, துளசி மீது போலீஸாா் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். இதனிடையே, கணவருடனான தகராறைத் தொடா்ந்து, ஆந்திரத்தில் உள்ள தனது சொந்த ஊருக்குச் சென்றிருந்த துளசியை செஞ்சி அனைத்து மகளிா் நிலைய காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராஜகுமாரி தலைமையிலான தனிப்படையினா் அங்கு சென்று ஞாயிற்றுக்கிழமை மாலை கைது செய்தனா்.

பின்னர் செஞ்சி அழைத்து வந்து விசாரணை நடத்தினர், அதில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக போலீசார் அழைத்து சென்றனர். பின்னர் செஞ்சி நீதிமன்றத்தில் துளசியை போலீசார் ஆஜர்படுத்தினர், அங்கு குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தினேஷ் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து செஞ்சி போலீசார் துளசியை சிறையில் அடைத்தனர்.

தாய் தாக்கியதில் பலத்த காயமடைந்த குழந்தை பிரதீப் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து, தற்போது நலமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News