திமுக வசப்படுமா செஞ்சி பேரூராட்சி?
மீண்டும் திமுக வசப்படுமா செஞ்சி பேரூராட்சி? என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது;
விழுப்புரம் மாவட்டத்தில் அரசியலில் பரபரப்பு மிக்க பேரூராட்சியாக செஞ்சி உள்ளது.
தற்போது மக்கள் தொகை சுமார் 32 ஆயிரமாக இருக்கிறது பேரூராட்சி தலைவர் பதவி பொது பிரிவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. கடந்த 5ம் தேதி வெளியான வாக்காளர் பட்டியல் படி மொத்தம் 23,939 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 11,497 ஆண்கள், 12,422 பெண்கள், 20 திருநங்கைகள்.
பேரூராட்சியில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். வாக்காளர்கள் அதிகம் என்பதால் 18 வார்டுகளுக்கு 32 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. கடந்த 1986ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை நடந்த 5 தேர்தலிலும் தி.மு.க., சார்பில் தற்போது அமைச்சராக உள்ள மஸ்தான் வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த 2011 தேர்தலின் போது 9 வார்டுகளில் தி.மு.க.,வும், 7 வார்டுகளில் அ.தி.மு.க.,வும், 2 வார்டுகளில் தே.மு.தி.க.,வும் வெற்றி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்த வார்டுகள் 18
எஸ்சி பொது 2
எஸ்சி பெண்கள் 1, 13,
பெண்கள் பொதுப்பிரிவு 3,4,8,9, 14, 16,17 என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இங்கு ஏற்கனவே தற்போது அமைச்சராக உள்ள மஸ்தான் தலைவராக இருந்துள்ளார் என்பதும், தற்போது அமைச்சரின் பேரூராட்சி என்பதாலும் இங்கு திமுக வெற்றி பெறுவது என்பதில் சந்தேகம் இல்லை.
ஆனாலும் ஜனநாயக முடிவு பொதுமக்கள் கையில் உள்ளது.