செஞ்சியில் தனியார் நிறுவனம் சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது
செஞ்சியில் தனியார் நிறுவனம் சார்பில் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சியை காவல் கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார்.;
விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி சங்கர் ஜுவல்லரி மற்றும் எலக்ட்ரானிக்கல் சார்பில் செஞ்சி பகுதியில் உள்ள காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர், பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் ஏழை எளியவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ். ராதாகிருஷ்ணன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் செஞ்சி காவல்துறை துணை கண்காணிப்பாளர் இளங்கோவன், ஆய்வாளர் அன்பரசு, உதவி ஆய்வாளர் ராஜாராமன், சங்கர் ஜுவல்லரி உரிமையாளர் ஜெ.சங்கர் உட்பட பலர் உடனிருந்தனா்.