வாங்க பயிற்சி வேலையோடு போங்க மகளிர் திட்டம் அறிவிப்பு
விழுப்புரம் மாவட்ட மகளிர் திட்டம் சார்பில் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது;
மாவட்ட மகளிர் திட்ட இளைஞர் திறன் திருவிழாவிற்கு வாங்க பயிற்சியுடன் கூடிய வேலையோடு போங்க என தெரிவித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம்,மகளிர் திட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் செயல்பட்டு வரும் தீனதயாள் உபாத்யாய கிராமின் கௌசல் யோஜனா( DDU - GKY) திட்டத்தின் கீழ் இளைஞர் திறன் திருவிழா வருகின்ற 27.07.2022 புதன்கிழமை அன்று சுமங்கலி திருமண மண்டபம், (செஞ்சி வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில்) காலை 09.30 மணி முதல் 3.30 மணி வரை நடைபெற உள்ளது.
இத்திருவிழாவில் 8ஆம் வகுப்பு முதல் பட்டபடிப்பு வரை படித்து வேலைவாய்ப்பு அற்ற 18 முதல் 40 வயது வரை உள்ள இளைஞர்கள் (ஆண் (ம) பெண் இருபாலர்களும்) பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பினை பெற்று பயன் பெற கேட்டுக்கொள்கிறேன். மேலும் இவ்விழாவில் தீனதயாள் உபாத்யாய கிராமின் கௌசல் யோஜனா( DDU - GKY) பயிற்சி நிறுவனங்கள், கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் (RSETI) மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் (TNSDC) பயிற்சி நிறுவனம் மற்றும் பல்வேறு அரசு துறைகள் மூலம் பயிற்சி அளிக்கும் துறைகள் கலந்து கொண்டு பயிற்சி அளிக்க இளைஞர்களை தேர்வு செய்ய உள்ளார்கள்.
பயிற்சியில் சேர விருப்பம் உள்ள இளைஞர்கள் சுய விபர குறிப்பு(Bio Data), ஆதார் அட்டை நகல், கல்விச்சான்றிதழ் நகல்கள், மற்றும் புகைப்படங்களுடன் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பயிற்சியில் சேருவதற்கான ஆணை அன்றே வழங்கப்படும். மேலும் வருகை தரும் அனைவரும் முக கவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும் என அதில் தெரிவித்து உள்ளனர்.