விழுப்புரம் மாவட்டம்: இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு துவக்கம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.;

Update: 2021-10-09 06:45 GMT

செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட மேல்மலையனூர் ஒன்றியம் சாத்தாம்பாடி ஊராட்சியில் வாக்கு போட வந்த முதியவர். 

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 6 ந்தேதி முதற்கட்ட உள்ளாட்சி வாக்கு பதிவு நடந்து முடிந்த நிலையில், இன்று காணை, கோலியனூா், மயிலம், மரக்காணம், வல்லம், மேல்மலையனூா்ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களில் இரண்டாம் கட்ட வாக்குபதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது, 1,379 வாக்குச் சாவடிகளில் மொத்தம் 6 லட்சத்து,92ஆயிரத்து,228 பேர் வாக்களிக்க உள்ளனர். இந்த பணியில் 11 ஆயிரத்து 411வாக்குப் பதிவு அலுவலா்கள் ஈடுபட்டு வருகின்றனர். 2ஆயிரத்து 800 பதவிகளுக்கு, 8ஆயிரத்து 955 வேட்பாளர்கள் போட்டி களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News