சிறுபான்மை நலத்துறை அமைச்சருக்கு வாழ்த்து

சிறுபான்மை நலத்துறை அமைச்சராக கே.எஸ்.மஸ்தானுக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்;

Update: 2021-05-09 15:45 GMT

சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தானுக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற  கே.எஸ்.மஸ்தான், தமிழக அரசில் சிறுபான்மை துறை அமைச்சராக பதவி ஏற்று சொந்த ஊருக்கு வந்தார். 

அமைச்சரை மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை, எஸ்.பி ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங், திண்டிவனம் சார் ஆட்சியர் அனு உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News