நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விழுப்புரம் ஆட்சியர் ஆய்வு

Villupuram Collector inspection at Direct Paddy Procurement Station;

Update: 2022-06-17 09:15 GMT

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியம், வளத்தி ஊராட்சியில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன் திடீர் ஆய்வு செய்தார்.

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில்  விழுப்புரம் ஆட்சியர் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியம், வளத்தி ஊராட்சியில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன் திடீர் ஆய்வு செய்தார்.

அப்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருவதை பார்வையிட்டதுடன், விவசாயிகளிடம் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் உரிய காலத்தில் பெறப்படுகிறதா என கேட்டறிந்ததுடன், நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட நெல் மூட்டைகளை அதிகளவு இருப்பு வைக்காமல் அவ்வப்பொழுது சேமிப்பு கிடங்கிற்கு அனுப்பி வைக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தியதுடன், ஒவ்வொரு நாளும் விவசாயிகள் கொண்டு நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைத்திருக்கும் வகையில் அதிகளவு தார்பாய்கள் இருப்பு வைத்து பாதுகாப்பு பணியினை மேற்கொள்ள வேண்டும். காரணம் மழைக்காலம் என்பதால் நெல் மூட்டைகள் பாதிக்காத வகையில் பாதுகாத்திட வேண்டும். அதேபோல் பணியாளர்களும் விரைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

Tags:    

Similar News