செஞ்சி அருகே கார்-லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூவர் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

Update: 2022-08-30 10:30 GMT

சாலை விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணி நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம்  கலவை தாலுகா கீரம் பாடி பகுதியைச் சேர்ந்தவர் முத்து ராஜேந்திரன் (வயது ௬௦). இவருடைய தந்தை முத்துப்பாண்டியன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக மதுரையில் இறந்து விட்டார் நேற்று அவருக்கு முப்பதாம் நாள் துக்க நிகழ்ச்சி அனுஷ்டிக்கப்பட்டது,

அந்நிகழ்ச்சியில் முத்து ராஜேந்திரன், அவரது மனைவி சாந்தி,   மகன் அழகுவேல் ராஜா மற்றும் மதுரை அச்சம்பத்து பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணனின் மனைவி சகுந்தலா தேவி  ஆகியோர் பங்கேற்று விட்டு நேற்று இரவு காரில் மதுரையில் இருந்து புறப்பட்டு விழுப்புரம் மாவட்டம் வளத்தி - அருள் நாடு கல்லறை அருகே அதிகாலை 3 மணி அளவில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக செஞ்சியில் இருந்து சேத்துப்பட்டு நோக்கி வந்து கொண்டிருந்த லாரி மீது, கார் மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே ராஜேந்திரன் அவருடைய மனைவிசாந்தி மற்றும் அவரது மகன் அழகு ராஜா ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். மேலும் மதுரையைச் சேர்ந்த சகுந்தலா தேவி பலத்த காயம் அடைந்து மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள சி.எம்.சி மருத்துவமனையில் மேல்  சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தை அறிந்த செஞ்சி டி.எஸ்.பி .பிரியதர்ஷினி தலைமையில் போலீசார் விரைந்து சென்று விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் உயிர் இழந்த உடல்களை கைப்பற்றி உடற்கூறுஆய்விற்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து தொடர்பாக  வளத்தி போலீசார் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா கொத்தம் வாடியை சேர்ந்த லாரி டிரைவர் சுந்தர் (வயது 28) என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News