செஞ்சி வட்ட வாலிபர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் நடைபெற்ற வாலிபர் சங்க மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.;
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வட்ட மாநாடு செஞ்சியில் நடைபெற்றது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் செஞ்சி வட்ட மாநாடு ஜெ. வேலு தலைமையில் நடைபெற்றது. இதில் விழுப்புரம் மாவட்ட செயலாளர் அறிவழகன் துவக்க உரையாற்றினார். மாவட்ட குழு உறுப்பினர் சதீஷ்குமார் வாழ்த்துரையாற்றினார். செஞ்சி வட்ட செயலாளர் சுரேஷ் வேலை அறிக்கை சமர்ப்பித்தார். இறுதியாக விழுப்புரம் மாவட்ட தலைவர் எஸ் பிரகாஷ் அவர்கள் நிறைவு உரையாற்றினார்.
மாநாட்டில் செஞ்சியில் தொழிற்சாலை அமைத்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தரவேண்டும். செஞ்சி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்திட வேண்டும். பாக்கம் கிராமத்தில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக உயர்த்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் புதிய வட்ட நிர்வாகிகளாக செஞ்சி வட்ட தலைவராக ஜெ. வேலு, வட்ட செயலாளராக எம்.மேகராஜ், பொருளாளராக அரவிந்த் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.