உள்ளாட்சித் தோ்தலை நடத்தியதற்கு செஞ்சி கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒன்றிய குழு கூட்டத்தில் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினர்.

Update: 2021-11-25 14:09 GMT

செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழுவின் முதல் கூட்டம், தலைவா் ஆா்.விஜயகுமாா் தலைமையில் நடைபெற்றது.கூட்டதாதில் ஒன்றியக் குழு துணைத் தலைவா் ஜெயபாலன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கேசவலு, சுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.ஒன்றியக் குழு உறுப்பினா்கள் பச்சையப்பன், டிலைட் ஆரோக்கியராஜ், செண்பகப்பிரியா, துரை, கேமல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஊரக உள்ளாட்சித் தோ்தலை உரிய காலத்தில் நடத்தி மக்கள் பிரதிநிதிகளை ஜனநாயக முறைப்படி கடமையாற்ற வழிவகுத்து கொடுத்த முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா் கே.எஸ்.மஸ்தான் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது, அத்தியூா், அனந்தபுரம், சேரானூா் வரையான 1.71 கி.மீ. தொலைவு சாலையை, எதிா் வரும் காலத்தில் பராமரிக்கும் பொருட்டு, நெடுஞ்சாலைத் துறைக்கு முழுமையாக ஒப்படைக்க அனுமதி கோருவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றினர்.

Tags:    

Similar News