தையல் கடைகளுக்கு இலவச மின்சாரம் வழங்க கோரிக்கை
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் நடைபெற்ற தையல் கலைஞர்கள் சங்கத்தினர் பேரவை கூட்டம் நடைபெற்றது.;
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் விழுப்புரம் மாவட்ட தையல் தொழிலாளர் சங்கத்தின் 6 வது பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிஐடியு மாநில தலைவர் சுந்தரம், மாவட்ட செயலாளர் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் டைலர் கடைகளுக்கு இலவச மின்சாரம் வழங்கிட வேண்டும். வீட்டிலேயே தைக்கும் டைலர்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கிட வேண்டும்.
சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்களில் முறையாக தேர்தல் நடத்திடவும், பாரபட்சமின்றி அனைவருக்கும் பள்ளிச் சீருடை தைத்திட துணிகள் வழங்கிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 2004-க்கு பிறகு கூலி உயர்வு இல்லை. அதனை உடனடியாக உயர்த்திக்கொடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகளாக தலைவராக செல்வராஜ், செயலாளராக ஏழுமலை, பொருளாளராக காஞ்சனா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.