மேல்மலையனூர் அருகே பழங்குடி மக்களுக்கு நல உதவி
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட மேல்மலையனூர் அருகே பழங்குடி மக்களுக்கு அமைச்சர் மஸ்தான் நல உதவிகள் வழங்கினார்.;
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட மேல்மலையனூர் ஒன்றியம்,பழம்பூண்டி கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்டு, அங்குள்ள சமுதாய கூடத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த பழங்குடி மக்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் சென்று சந்தித்து பார்வையிட்டு, ஆறுதல் கூறினார்
பின்னர் அவர்களுக்கு தேவையான அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கினார். அப்போது அலுவலர் மற்றும் பலர் உடனிருந்தனா்.