செஞ்சி அருகே தரமற்ற தார்சாலை: எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியல்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே தரமற்ற தார் சாலை அமைப்பதை கண்டித்து, பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதிக்குட்பட்ட செ.கொளபாக்கம் முதல், கோழிப்பண்ணை வரை உள்ள இரண்டரை கிலோமீட்டர் தார்சாலை மிகவும் மோசமான நிலையில் இருந்தது, அதனை செப்பனிடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
ஆனால், அந்தப் பணிக்கு அரசு ரூபாய் 32 லட்சத்து 68 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் தரமற்ற முறையில், அந்த தார் சாலை போடும் பணி நடைபெற்று வருவதால், அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, தடுத்து தரமான முறையில் தார் சாலை அமைக்க கோரிக்கை விடுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.