செஞ்சி ஒன்றியத்தில் இலவச வீடுகள் குறித்து திட்ட இயக்குனர் ஆய்வு
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் இலவச வீடு குறித்து திட்ட இயக்குனர் சங்கர் ஆய்வு செய்தார்.;
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒன்றியத்தில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகள் குறித்து விழுப்புரம் மாவட்ட திட்ட இயக்குனர் சங்கர் ஆய்வு செய்தார்.
அப்போது பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் இதுவரை கட்டப்பட்டுள்ள வீடுகள் குறித்த விவரத்தை ஒன்றிய அலுவலர்களுடன் அவர் கேட்டறிந்தார். நிலுவையில் உள்ள வீடுகளையும் அடுத்த மாதம்(ஆகஸ்டு) 15-ந் தேதிக்குள் கட்டி முடிக்க உத்தரவிட்டார். ஆய்வின்போது உதவி திட்ட இயக்குனர் (வீடுகள்) குருசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் (வீடுகள்) நந்தகோபாலகிருஷ்ணன், செஞ்சி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கேசவலு, சம்பந்தம் மற்றும் உதவி பொறியாளர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணி மேற்பார்வையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.