செஞ்சி பகுதியில் மாற்று கட்சியினர் திமுகவில் இணைந்தனர்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியில் மாற்று கட்சியினர் அமைச்சர் மஸ்தான் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

Update: 2021-10-30 14:23 GMT

அமைச்சர் மஸ்தான் முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட மேல்மலையனூர் ஒன்றியம், நாரணமங்கலம் ஊராட்சியில்100 க்கும் மேற்பட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் இன்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

மேல்மலையனூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் நெடுஞ்செழியன், மாவட்ட கவுன்சிலர்கள் சுப்பிரமணியன் இராமசரவணன், மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து  பலர் உடனிருந்தனா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி செய்திருந்தார்.

Tags:    

Similar News