உருது பள்ளி கட்டடத்திற்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உருது ஆரம்பப்பள்ளி புதிய கட்டடத்திற்கு அமைச்சர் மஸ்தான் அடிக்கல் நாட்டினார்.;
விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட சக்கராபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (உருது) சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து 24 லட்சம் மதிப்பீட்டில் 3 வகுப்பறைகள் கொண்ட கட்டிடத்தை கட்டுவதற்காக அமைச்சர் செஞ்சி மஸ்தான் அடிக்கல் நாட்டினார்.
ஒன்றிய சேர்மன் விஜயகுமார், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனர்.