செஞ்சி தொகுதியில் சமத்துவபுரத்திற்கு இடம் தேர்வு
செஞ்சி அருகே மேல்மலையனூர் பகுதியில் அமையவுள்ள சமத்துவபுரத்திற்கான இடத்தை அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட மேல்மலையனூர் ஒன்றியம்,பெருவளுர் ஊராட்சி, பாப்பந்தங்கள் கிராமத்தில் தமிழக அரசின் சார்பில் அமையவுள்ள சமத்துவபுரத்திற்கான இடத்தை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்,
அப்போது மேல்மலையனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பலர் உடனிருந்தனா்.