ஏரி உடைப்பை அமைச்சர் ஆய்வு செய்தார்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உடைந்த ஏரியை அமைச்சர் நேரில் ஆய்வு செய்தார்.;

Update: 2021-11-19 15:46 GMT

ஏரி உடைப்பை பார்வையிட்ட அமைச்சர் மஸ்தான்

விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட செஞ்சி ஒன்றியம், கொம்மேடு ஊராட்சியில் உள்ள ஏரி நீர் வரத்து அதிகரித்ததன் காரணமாக உடைந்தது.

ஏரி உடைந்துள்ள இடத்தை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் சென்று பார்வையிட்டு,  ஊருக்குள் வெள்ள நீர் போகாதவாறு தடுப்பு ஏற்படுத்தும் பணியை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். அப்போது சேர்மன் விஜயகுமார் உடனிருந்தார்.

Tags:    

Similar News