சிங்கவரம் கோயில் நீர்தேக்க தொட்டி அமைய உள்ள இடத்தில் அமைச்சர் ஆய்வு
செஞ்சி அருகே உள்ள சிங்கவரம் கோயிலுக்காக நீர்தேக்க தொட்டி அமைய உள்ள இடத்தை அமைச்சர் மஸ்தான் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட சிங்கவரம் அரங்கநாதர் திருக்கோயிலுக்கு தமிழக அரசு சார்பில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டித்தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமையவுள்ள இடத்தை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.