அரசு பள்ளி கட்டடத்தை திறந்து வைத்த அமைச்சர் மஸ்தான்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள அரசு பள்ளி கட்டடத்தை அமைச்சர் மஸ்தான் இன்று திறந்து வைத்தார்.;
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள இல்லோடு அரசினர் மேல்நிலைப் பள்ளியை இன்று சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவகுமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா, ஒன்றிய குழு தலைவர் அமுதா மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து பலர் உடனிருந்தனா்.