செஞ்சியில் நடமாடும் காய்கறி சேவையை அமைச்சர் மஸ்தான் தொடங்கி வைத்தார்
செஞ்சியில் காய்கறி விற்பனை செய்யும் நடமாடும் காய்கறி வாகனத்தை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.;
செஞ்சியில் நடமாடும் காய்கறி சேவையை அமைச்சர் மஸ்தான் தொடங்கி வைத்தார்
விழுப்புரம் மாவட்டத்தில் கொரானா பரவலை தடுக்கும் பொருட்டு முழு ஊரடங்கு அமல்படுத்தபட்டுள்ளது. மக்கள் வெளியில் வராமல் இருக்க, மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு தேவையான காய்கறிகளை விற்பனை செய்யும் நடமாடும் காய்கறி வாகனத்தை ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி, செஞ்சியில் நடமாடும் காய்கறி வாகனத்தை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.