செஞ்சியில் அரசு புதிய கலைகல்லூரியை அமைச்சர் மஸ்தான் திறந்து வைப்பு

செஞ்சியில் அரசு புதிய கலைகல்லூரியை அமைச்சர் மஸ்தான் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

Update: 2022-07-08 15:29 GMT

புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை அமைச்சர் செஞ்சி மஸ்தான் திறந்து வைத்தார்.

விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி ராஜா தேசிங்கு அரசு பள்ளி வளாகத்தில் புதிதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமை தாங்கினார்.

மயிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார், திண்டிவனம் உதவி கலெக்டர் அமீத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து செஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து பேசுகையில், இந்த கல்லூரியை செஞ்சி, வல்லம், மேல்மலையனூர் பகுதிகளில் உள்ள 180-க்கு மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் பயன்படுத்தி பயனடைய வேண்டும் என்றார்.

விழாவில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் மூலம் முதியோர் மற்றும் விதவைகள் 170 பேருக்கு அரசு உதவித்தொகை தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ 8.85 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார். தொடர்ந்து வல்லம் ஒன்றியம் மேல் களவாய் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் ரூ.9.65 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடத்தையும், ரூ 7.99 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் திறந்து வைத்தார்.

Tags:    

Similar News