மேல்மலையனூர் கொரோனா சிகிச்சை மையத்தில் அமைச்சர் மஸ்தான் நோயாளிகளுக்கு தோசை சுட்டு கொடுத்தார்

மேல்மலையனூர் கொரோனா சிகிச்சை முகாமை ஆய்வு செய்த அமைச்சர் மஸ்தான் நோயாளிகளுக்கு தோசை சுட்டு கொடுத்தார்.;

Update: 2021-06-02 15:23 GMT

மேல்மலையனூர் கொரோனா சிகிச்சை மையத்தில் அமைச்சர் மஸ்தான் நோயாளிகளுக்கு தோசை சுட்டு கொடுத்தார்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட மேல்மலையனூர் கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்ட அமைச்சர் மஸ்தான் அங்கு நோயாளிகளின் வருகை, அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், ஆக்ஸிஜன் தேவைகள், மருந்து, மருத்துவ உபகரணங்களின் தேவை குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவினை பரிசோதிக்க சமையற்கூடம் சென்ற அமைச்சர், அங்கு தானே தோசை வார்த்து, மாவின் அளவு, புளிப்புத் தன்மை, அதன் தரம் ஆகியவற்றை கேட்டறிந்து, உணவுப் பொருள்கள் குறித்தான அறிவுரைகளை வழங்கினார்.அப்போது எஸ்பி.ராதாகிருஷ்ணன் உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags:    

Similar News