323 பேருக்கு வீடு கட்டும் ஆணையை வழங்கிய அமைச்சர் மஸ்தான்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் 323 பேருக்கு வீடு கட்டும் ஆணையை அமைச்சர் மஸ்தான் வழங்கினார்.;
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேரூராட்சி அலுவலகத்தில், நேற்று (10.06.2022) வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மற்றும் பேரூராட்சிகள் நிர்வாகம் மூலம், சுயமாக வீடு கட்டும் திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் மோகன் முன்னிலை வகித்தார். சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தலைமையேற்று பயனாளிகளுக்கு பணி ஆணையினை வழங்கினார்.
தமிழக முதல்வர் (10.06.2022) தலைமைச்செயலகத்தில், காணொளி காட்சியின் மூலம் பல்வேறு மாவட்டங்களில் பாரத பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின்கீழ், பயனாளிகளுக்கு சுயமாக வீடு கட்டும் திட்டத்தில் பணி ஆணையினை வழங்கி துவக்கி வைத்துள்ளார். அதனையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் மூலம், நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் 950 வீடுகள் கட்ட ஆணைகள் வழங்க உத்தரவிட்டு, அதனபடிப்படையில் இன்று 323 நபர்களுக்கு வீடு கட்டுவதற்கான ஆணையை வழங்கினார்.
இத்திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில், 2584 வீடுகள் ஒப்புதல் பெறப்பட்டு 1071 வீடுகள் முடிவுற்றும், 575 வீடுகள் முன்னேற்றத்திலும் மற்றும் 938 வீடுகள் தொடங்கப்பட உள்ளது என தெரிவித்தார்.திண்டிவனம் சார் ஆட்சியர் எம்.பி.அமித், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய உதவி நிர்வாக பொறியாளர் இமாகுலேட் ராஜேஸ்வரி, செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி, செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார், அனந்தபுரம் ஒன்றிய குழு தலைவர் முருகள், உதவி பொறியாளர் ரம்யா, பேரூராட்சி செயல் அலுவலர்கள் தராமலிங்கம் (செஞ்சி), மலர் (அனந்தபுரம) மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனா்.