செஞ்சியில் புதுப்பிக்கப்பட்ட உழவர் சந்தை; அமைச்சர் திறந்து வைப்பு
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் புதுப்பிக்கப்பட்ட உழவர் சந்தையை அமைச்சர் மஸ்தான் திறந்து வைத்தார்.;
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணித்துறை சார்பாக ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட உழவர் சந்தையினை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சியர் மோகன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ரமணன், வேளாண் துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) கண்ணகி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) பெரியசாமி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.