கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்த அமைச்சர்

செஞ்சி அருகே கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாமை அமைச்சர் மஸ்தான் தொடங்கி வைத்தார்.

Update: 2021-12-28 10:00 GMT

முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் மஸ்தான்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட அணையேரி கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் அணையேரி ரவி தலைமை தாங்கினார். முகாமை அமைச்சர் செஞ்சி மஸ்தான் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். அப்போது செஞ்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் வழக்கறிஞர் விஜயகுமார் மற்றும் கால்நடைத்துறை மருத்துவர்கள், கிராம மக்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News