மேல்மலையனூர் உண்டியல் வசூல் ரூ. 51 லட்சம்: கோயில் நிர்வாகம்

Melmalayanur Temple -விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் பக்தர்கள் ரூ.51 லட்சம் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.

Update: 2022-07-23 02:15 GMT

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில்.

Melmalayanur Temple - விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் பக்தர்கள் உண்டியல்களில் செலுத்தும் காணிக்கைகளை மாதந்தோறும் எண்ணுவது வழக்கம். இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் மேல்மலையனூர் ஜீவானந்தம், விழுப்புரம் விஜயராணி, துணை ஆணையர் சிவலிங்கம், ஆய்வாளர் சங்கீதா, செயல் அலுவலர் திருவக்கரை சிவக்குமார், கோலியனூர் சிவக்குமார், அறங்காவலர் குழு தலைவர் வடிவேல் பூசாரி ஆகியோர் முன்னிலையில் உண்டில்கள் திறந்து நேற்று  எண்ணப்பட்டன. இதில் ரூ.50 லட்சத்து 98 ஆயிரத்து 126 ரொக்கமும், 325 கிராம் தங்கமும், 660 கிராம் வெள்ளிப் பொருட்களையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News