மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மருத்துவ மையம் திறப்பு
செஞ்சி தொகுதிக்குட்பட்ட மேல்மலையனூரில் அமைந்துள்ள அங்காளம்மன் கோயிலில் மருத்துவ மையத்தை முதலமைச்சர் காணொளி மூலம் திறந்து வைத்தார்;
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி திருக்கோவிலில் அமைக்கபட்டுள்ள மருத்துவ மையத்தினை திறந்து வைத்தார்,
அதனை தொடர்ந்து, மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி திருக்கோவிலில் மருத்துவ மையத்திற்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் சென்று மாவட்ட கலெக்டர் த.மோகன் முன்னிலையில் குத்துவிளக்கேற்றி, மையத்தை பார்வையிட்டார்,
அப்போது விழுப்புரம் மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கஜேந்திரன், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்/செயல் அலுவலர் க.ராமு, மேல்மலையனூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் கண்மணி நெடுஞ்செழியன், ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் விஜியலட்சுமி உட்பட பலர் உடனிருந்தனா்.