செஞ்சியில் திமுக வேட்பாளரை ஆதரித்து, மார்க்சிஸ்ட் பொதுக் கூட்டம்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி திமுக வேட்பாளரை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பொதுக் கூட்டம் நடத்தி வாக்கு சேகரித்தனர்.;
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.எஸ். மஸ்தானுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் அவலூர்பேட்டையில் கிளை செயலாளர் கார்த்திக் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது,
கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர் .ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி. குமார், எஸ்.முத்துக்குமாரன் ஆகியோர் கலந்து கொண்டு மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளுக்கு ஏன் வாக்கு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினர்,
கூட்டத்தில் வட்டசெயலாளர் டி.முருகன், வட்ட குழு உறுப்பினர்கள் உதயகுமார், அண்ணாமலை, குமார், நடராஜன், சுப்பரமனி, கோதாவரி மனோகர், ஏழுமலை, அய்யப்பன் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளார்.