உள்ளாட்சி தேர்தல் வாக்கு சாவடி மையங்கள்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு
வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள வாக்கு சாவடியை ஆட்சியர் ஆய்வு செய்தார்.;
வருகின்ற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புத்தகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உள்ளாட்சி தேர்தல் -2021 முன்னிட்டு அமைக்கப்படவுள்ள வாக்குச்சாவடி மையத்தினை மாவட்ட ஆட்சியர் மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அருகில் காவல் துணை கண்காணிப்பாளர் இளங்கோவன், செஞ்சி வருவாய் வட்டாட்சியர் ராஜன் உட்பட துறை சார்ந்த அலுலர்கள் பலர் உடனிருந்தனர்.