வளத்தி லயன்ஸ் சங்க 4ம் ஆண்டு புதிய நிர்வாகிகள் சேவைப்பணி ஏற்பு விழா
மேல்மலையனூர் அருகே வளத்தியில் லயன்ஸ் சங்க 4வது ஆண்டு புதிய நிர்வாகிகள் சேவைப் பணி ஏற்பு விழா மற்றும் சேவை திட்டங்கள் துவக்க விழா நடைபெற்றது
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம் வளத்தியில் லயன்சங்க 4}வது ஆண்டு புதிய நிர்வாகிகள் சேவைப் பணி ஏற்பு விழா மற்றும் சேவை திட்டங்கள் துவக்க விழா நடைபெற்றது.
வளத்தி லயன்ஸ் சங்க தலைவர் ஆர்.பாபு தலைமை வகித்தார்.மாவட்ட தலைவர் எல்.பி.நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் சேவை திட்டங்களை துவக்கி வைத்து விழா சிறப்புரையாற்றினார்.
புதிய நிர்வாகிகளுக்கு மாவட்ட இரண்டாம் துணை ஆளுநர் ஜி.பி.கோபிகிருஷ்ணன் வளத்தி லயன்ஸ் புதிய தலைவர் ஆர்.ஜெயசங்கர், செயலர் எல்.ஆறுமுகம், பொருளர் சி.டி.சுவாமிநாதன் உள்ளிட்ட புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். கௌரக விருந்தினராக என்.சிவக்குமார் மற்றும் அவை செயலர் கே.கமலக்கண்ணன், அவை பொருளர் ஆர்.செல்வகுமார், மண்டல தலைவர் கே.அபிராமன், வட்டார தலைவர் என்.சதிஷ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் வளத்தி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த தூய்மை பணியாளர்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.