ஒரு மணி நேர மழைக்கே தாங்காத செஞ்சி, பருவ மழையை தாங்குமா?
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி நகரம் இன்று பெய்த ஒரு மணி நேர மழைக்கு தாங்கவில்லை, பருவ மழையை தாங்குமா என கேள்வி எழுந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட செஞ்சி சுற்றுவட்டார பகுதி மற்றும் செஞ்சி பகுதியில் இன்று பெய்த ஒரு மணி நேர கனமழையால் நகரம் முழுவதும் மழைநீர் மற்றும் சாக்கடை நீர் கலந்து முக்கிய வீதிகளான காந்தி பஜார், நான்கு முனை சாலை மற்றும் முக்கிய தெருக்களில் ஓடுவதால் நோய் தொற்றுஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால், பொதுமக்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர், தற்போது இந்த மழைக்கே தாங்காத செஞ்சி நகரம் எதிர் வரும் பருவ மழையை தாங்குமா என கேள்வி எழுந்துள்ளது