செஞ்சி கோட்டை மூடல்: பார்வையாளர்கள் ஏமாற்றம்

சுற்றுலா இடமான செஞ்சி கோட்டை கொரானா பரவலை தொடர்ந்து மூடப்பட்டது, அதனால் பார்வையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Update: 2021-04-17 09:16 GMT

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக, நோய்த் தொற்று தீவிரமாகப் பரவி வருகிறது. இதையடுத்து மாவட்டத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன, இந்த நிலையில், தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள செஞ்சிக்கோட்டையை வருகிற மே 15-ஆம் தேதி வரை மூடுமாறு மத்திய அரசு உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை செஞ்சிக்கோட்டையை சுற்றிப் பார்க்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

மேலும், ராஜகிரி, கிருஷ்ணகிரி கோட்டையின் கதவுகள் மூடப்பட்டன. இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்து திரும்பிச் சென்றனா். இதே போல, கடந்த ஆண்டு மார்ச் 17-ஆம் தேதி கொரோனா தொற்று காரணமாக, கோட்டைக் கதவுகள் மூடப்பட்டன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கொரோனா தொற்று பரவல் குறைந்ததையடுத்து, செஞ்சிக்கோட்டை மீண்டும் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. செஞ்சிக்கோட்டை மூடப்பட்டாலும், கோட்டையைச் சுற்றி இரும்பிலான பாதுகாப்பு அரண் அமைக்கும் பணி, ராஜகிரி கோட்டை மலையடிவாரத்தில் அழகுப்படுத்தும் பணி ஆகியவை தடைபடாமல் தொடா்ந்து நடைபெறும் என கோட்டை ஊழியா்கள் தெரிவித்தனா்.

Tags:    

Similar News