மேல்மலையனூர் அருகே 256 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

Free Bicycle -விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒன்றிய சேர்மன் சைக்கிள்களை வழங்கினார்.;

Update: 2022-08-26 05:14 GMT

மேல் மலையனூர் அருகே பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது.

Free Bicycle -விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதி மேல்மலையனூர் அருகே செவலபுரை மற்றும் தேவனூர் ஆகிய கிராமங்களில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ்-1 படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி அந்தந்த பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வட்டார கல்விக்குழு தலைவரும், ஒன்றிய தி.மு.க. செயலாளருமான நெடுஞ்செழியன் தலைமை தாங்கி, செவலபுரை பள்ளி மாணவர்கள் 130 பேருக்கும், தேவனூர் பள்ளி மாணவர்கள் 126 பேருக்கும் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மேல்மலையனூர் ஒன்றிய செயலாளர்கள் (மேற்கு) சுப்ரமணியன், (மத்தியம்) நாராயணமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் காசியம்மாள் கோதண்டம்,அவைத் தலைவர் ஆறுமுகம், ஒன்றிய பொருளாளர் கோபாலகிருஷ்ணன், ஒன்றிய துணை செயலாளர் காந்திமதி, ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா ஜெய்சங்கர், தலைமை ஆசிரியர்கள் விஜயலட்சுமி, இந்திரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News