செஞ்சி புதிய அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்கம்

செஞ்சி புதிய அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகளை அமைச்சர் செஞ்சி மஸ்தான் துவக்கி வைத்தார்.;

Update: 2022-09-08 09:57 GMT

செஞ்சி அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகளை அமைச்சர் செஞ்சி மஸ்தான் துவக்கி வைத்தார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நிகழாண்டு முதல் மாணவா்கள் சோ்க்கை நடைபெற்றது. இளநிலை பட்டப் படிப்பில் தமிழ், ஆங்கிலம், வணிகவியல், கணினி அறிவியல் மற்றும் பி.பி.ஏ. பாடப் பிரிவுகளுக்கான வகுப்புகளை அமைச்சா் செஞ்சி கே.எஸ். மஸ்தான் புதன்கிழமை தொடங்கி வைத்து பேசினாா்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. சீதாபதி சொக்கலிங்கம், செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா், பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் மஸ்தான், கல்லூரி முதல்வா் ரவிசங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News