விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உழவர் நண்பர்கள் ஆலோசனைக் கூட்டம்

Farmer Friends Consultative Meeting in Villupuram District Ginge;

Update: 2022-06-25 09:00 GMT

செஞ்சியில் உழவர் நண்பர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் அட்மா திட்டத்தின் மூலம் நிகழ்ச்சிக்கு வேளாண்மை அலுவலர் தீபிகா முன்னிலை வகித்து அட்மா திட்டத்தின் பயன்கள் குறித்து எடுத்துரைத்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார் கலந்து கொண்டு உழவர் நண்பர்கள் குழு செயல்பாடுகள் குறித்தும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் குறித்து விளக்கி பேசினார். நிகழ்ச்சியில் அட்மா திட்ட தலைவர் வாசு ஊராட்சி தலைவர் குமார் உதவி தொழில்நுட்ப மேலாளர் ஜெயஸ்ரீ, ராஜலட்சுமி உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர், கூட்டத்தில் முன்னோடி விவசாயிகள் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Tags:    

Similar News