செஞ்சி அருகே மின் கோபுர இழப்பீடு வழங்காததால் விவசாயி தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே அன்னமங்கலத்தில் மின் கோபுரம் இழப்பீடு வழங்காததால் விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-10-10 13:29 GMT

சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே அன்னமங்கலம் கூட் ரோடு என்ற இடத்தில் கலிங்கமலை கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் மணி(55) என்பவர் விவசாய நிலத்தில் மின் உயர் கோபுரம் அமைக்கப்பட்டது. ஆனால் அமைப்பதற்கு உரிய இழப்பீடு வழங்காத நிலையில், விவசாயம் பாதிக்கப்பட்டு மன உளைச்சலில் இருந்தார். 

இன்று காலை விவசாய நிலத்திற்கு  சென்ற அவர், உயர் மின்கோபுரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டித்து உறவினர்கள் செஞ்சி சேத்பட் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது,

உடனடியாக தகவலறிந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர், இதனையடுத்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர், தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News