கரும்பு வெட்டும் கூலியை ஆலையே ஏற்று கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை
விழுப்புரம் மாவட்டத்தில் கரும்பு வெட்டும் கூலியை ஆலையே ஏற்று கொள்ள வேண்டும் என கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
செம்மேடு ராஜஸ்ரீ நிர்வாகம் நடப்பு பருவத்தில் விவசாயிகள் வெட்டி அனுப்பிய கரும்புக்கு ரூபாய் 12 கோடி கொடுக்க வேண்டிய நிலையில் அதை உடனடியாக வழங்கிட கோரியும், கரும்புக்கு வெட்டு கூலியை ஆலை நிர்வாகம் ஏற்றிட கோரியும், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் மாநிலத் துணைத் தலைவர் டி.ஆர் .குண்டு ரெட்டியார் தலைமையில் ராஜஸ்ரீ கரும்பு ஆலை நிர்வாகத்தின் ஆலையின் துணைத்தலைவர் ரமேஷ்சிடம் கோரிக்கை அடங்கிய மனுவை கொடுத்தனர்.
மனுவை பெற்ற அவர்உடனடியாக 30 நாட்களுக்குள் பாக்கி முழுவதும் கொடுப்பதாக உறுதியளித்தார். ஆனால் விவசாயிகள் ஒரு வார காலத்தில் கொடுக்க வேண்டுமென வலியுறுத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் மாதவன். மாவட்ட செயலாளர் ,
ஆர். டி முருகன், ஆளை மட்ட செயலாளர் சுரேஷ்குமார், செம்மேடு டிவிஷன் தலைவர் நரசிம்ம ராஜன், ஆலம்பூண்டி டிவிஷன் தலைவர் துரைசாமி, ,நிர்வாகத்தின் தரப்பில் உதவி பொது மேலாளர் பிரபாகர், சிவசண்முகம் ,ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.