உடைந்த குடிநீர் குழாயை சரிசெய்யுமா நிர்வாகம்?: கிராம மக்கள் எதிர்பார்ப்பு
செஞ்சி அருகே ஜம்போதி கிராமத்தில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி குட்டையாக மாறுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட ஜம்போதி கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் காலனி பகுதியில், பிள்ளையார் கோவில் அருகில் குடிநீர் குழாய் இணைப்பு உடைந்து,சுமார் ஆறு மாத காலம் ஆகின்றது. அந்த உடைப்பால் குடிநீர் வீணாக வெளியேறி, அந்த பகுதியில் குட்டையாக மாறி உள்ளது.
அந்த குட்டையில் உள்ள நீரில் நாய், குரங்கு, பன்றி போன்ற விலங்குகள் விளையாடி, மகிழ்வோடு நீர் அருந்துகின்றது, அதே நீர் மீண்டும் உடைந்த குடிநீர் குழாய் இணைப்பில் செல்வதால் விலங்குகளில் உள்ள கிருமிகள் நீரில் செல்கிறது, அந்த நீரை பயன்படுத்துகின்ற பொதுமக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது,
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, குடிநீரும் சரி செய்யப்படவில்லை, அதனால் மாவட்ட ஆட்சியர் உடைந்த குடிநீர் இணைப்பை சரி செய்வதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராமத்தினர் கோரிக்கை எழுப்பி வருகின்றனர், இல்லையேல் வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் தங்களின் எதிர்ப்பை காட்டபோவதாக அக்கிராம மக்களிடையே பேச்சு எழுந்துள்ளது.