செஞ்சி தொகுதியில் சிபிஎம் கிளை தொடக்கம்

செஞ்சி வட்ட குழு சார்பில் ஆலம்பூண்டியில் சிபிஎம் புதிய கட்சி கிளை தொடக்க விழா, மற்றும் புதிய நிர்வாகி தேர்வு நடைபெற்றது.

Update: 2021-11-07 10:30 GMT

ஆலம்பூண்டியில் நடைபெற்ற சிபிஎம் அலுவலக தொடக்க விழா

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்ட குழு சார்பில் ஆலம்பூண்டியில் சிபிஎம் கட்சியின் புதிய கிளை தொடக்க விழா ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன் கலந்துகொண்டு கட்சி வழிமுறைகள், செயல்பாடுகள், நெறிமுறைகள், குறித்து விளக்கிப் பேசினார், முன்னதாக செங்கொடி ஏற்றப்பட்டது,

நிகழ்ச்சியில் சிபிஎம் கட்சி நிர்வாகிகள் கே,மாதவன், ந.சந்திரசேகர்,வி.ஆல்பர்ட், உட்பட பலர் கலந்து கொண்டனர். புதிய கிளையின் கிளை செயலாளராக ஜெயக்குமார் தேர்வு செய்யப்பட்டார்,

Tags:    

Similar News