விஷப்பூச்சிகள் தொல்லை குறித்து புகார் அளித்தும் அலட்சியம் காட்டும் பேரூராட்சி செயலர்
செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட அனந்தபுரத்தில் பாம்பு, பூரான் தொல்லை குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத செயல் அலுவலர்;
தண்ணீர் தேங்கி குட்டை போல காட்சி அளிக்கும் அனந்தபுரம் பேரூராட்சி கலைஞர் கருணாநிதி தெரு
செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட அனந்தபுரம் பேரூராட்சி கலைஞர் கருணாநிதி தெரு கடைசியில் தண்ணீர் தேங்கி குட்டை போல காட்சி அளிக்கிறது. இங்கு கொசு உற்பத்தியும் அதிகமாக உள்ளது.
தற்போது மழை பெய்து வருவதால், பாம்பு பூரான் போன்ற விஷம் கொண்ட பூச்சிகள் சாதாரணமாக சுற்றி திரிகிறது. இது குறித்து அனந்தபுரம் பேரூராட்சி செயல் அலுவலரிடம் பல முறை புகார் சொல்லியும், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக செயல்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்,
இது குறித்து மாவட்ட கலெக்டர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.