விழுப்புரம் மாவட்டத்தில் நந்தன் கால்வாய் பணியினை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்

விழுப்புரம் மாவட்டத்தில் பல ஏரிகள் பயன் பெறும் வகையில் நடைபெற்று வரும் நந்தன் கால்வாய் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.;

Update: 2021-08-11 14:59 GMT

நந்தன் கால்வாய் திட்டபணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு நீர்வரத்து வாய்க்கால் நந்தன் கால்வாய் மூலம் நடைபெறுகிறது. பொதுப்பணித்துறை சார்பாக நந்தன் கால்வாய் திட்டப்பணிகளுக்கு ரூ.26.57 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியினை மாவட்ட கலெக்டர் மோகன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அருகில் பொதுப்பணித்துறை (நீ.வ.ஆ) செயற்பொறியாளர் ராஜேந்திரன், உதவி செயற்பொறியாளர் விஜயகுமார்,உதவி பொறியாளர் கனகராஜ்,விவசாயிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனா்.

Tags:    

Similar News