செஞ்சி அருகே ஏரி கலுங்குகள் உடைப்பு: கலெக்டர் ஆய்வு
செஞ்சி அருகே சம்போதி கிராமத்தில் உள்ள ஏரியின் கலுங்குகள் பகுதியில் உள்ள மதகு உடைக்கப்பட்டுள்ளதை கலெக்டர் மோகன் நேரில் ஆய்வு செய்தார்.
விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி அருகே ஜம்போதி ஏரி கலுங்குகல் மர்மநபர்கள் சேதப்படுத்தி உள்ளதை அறிந்த ஆட்சியர் மோகன் இரண்டு கிலோமீட்டர் தூரம் ஏரிக்கரை, வயல்கள் மற்றும் முட்புதரில் நடந்தே சென்று உடைந்த பகுதியை ஆய்வு செய்தார்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டத்திற்கு, உட்பட்ட ஜம்போதி கிராமத்தில், பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்போதி ஏரி கடைக்கால் பகுதியை மர்ம நபர்கள் சேதப்படுத்தினர், இது குறித்து அப்பகுதி மக்கள் ஆட்சியருக்கு புகார் தெரிவித்தனர்,
திங்கட்கிழமை சுமார் 2 கிலோமீட்டர் ஏரிக்கரை, வயல் வரப்புகள் மற்றும் முட்புதர்கள் நடந்தே சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, ஏரியை சேதப்படுத்திய நபர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கவும், ஏரி பகுதியில் ஆக்கிரமித்துள்ள ஆக்கிரமிப்பாளர்களை உடனடியாக அகற்றவும், வருவாய் துறை, பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து சேதம் ஏற்பட்டுள்ள கலுங்குகள் பகுதியை தற்காலிக அடைப்பு, தடுப்பு பணிகளை மேற்கொள்ளவும், பின்னர் நிரந்தரமாக கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளவும் உத்தரவிட்டார்.