100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி ரோட்டரி சங்கம் சார்பில் விழிப்புணர்வு
செஞ்சி அருகே அனந்தபுரம் ரோட்டரி சங்கம் சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்குட்பட்ட அனந்தபுரம் ரோட்டரி சங்கம் சார்பாக நூறு சதவீதம் வாக்குகளை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் அனந்தபுரம் கடைவீதியில் நடைபெற்றது.
அனந்தபுரம் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர், விக்கிரவாண்டி தாலுக்கா நுகர்வோர் கண்காணிப்புக் குழு உறுப்பினர் ஜேசு ஜூலியஸ் ராஜா தலைமை தாங்கினார். அனந்தபுரம் கிராம நிர்வாக அலுவலர் புகழேந்தி வாக்காளர்கள் தங்கள் வாக்குகள் தவறாமல் செலுத்த வேண்டும் என்ற துண்டுப் பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மதிவாணன், ராஜாராம்,மதன், அலில் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.