தரைப்பாலம் இடிந்ததால் போக்குவரத்து பாதிப்பு
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே தரைப்பாலம் இடிந்து உள்வாங்கியதால் 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.;
தரைப்பாலத்தில் சிக்கிய பேருந்து
விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி தொகுதிக்குட்பட்ட மேல்மலையனூர் அருகே உள்ள செவலபுரை கிராமத்தில் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே உள்ள போக்குவரத்து தரைப்பாலம், அவ்வழியே ஒரு அரசு பேருந்து சென்றபோது திடீரென உள்வாங்கி பேருந்து பள்ளத்தில் சிக்கிக்கொண்டது,
அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு யாருக்கும் காயம் ஏற்படவில்லை ஆனால் அவ்வழியே மேல்மலையனூர்,தாதன்குளம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது,
கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலம் மூழ்கியது. அதனால் போக்குவரத்து அப்போது பாதிக்கப்பட்டது,
இதனை அறிந்த அமைச்சர் மஸ்தான் நேரில் சென்று பார்வையிட்டு தரை பாலத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் அப்பகுதி மக்கள் அடிக்கடி சங்கராபரணி ஆற்றில் வெள்ளம் வரும்போது போக்குவரத்து பாதிக்கப் படுவதால் மேம்பாலம் வேண்டும் என கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.